ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் தினவிழா
1 min read
Alwarkurichi Parama Kalyani College Alumni Day
30.8.2023
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் தின விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது.
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் சங்க தலைவர் கே.முருகானந்தம் தலைமை வகித்தார். பொதுசெயலர் எஸ்.தங்கம் முன்னிலை வகித்தார்.
சி.ஈஸ்வரமூர்த்தி, எஸ்.ஹரிகிருஷ்ணன், பி.உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். கல்லூரி செயலர் முனைவர் ஜி.தேவராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.மீனாட்சி சுந்தர் வாழ்த்திப் பேசினர்.
கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர் முனைவர் ஆர்.வெங்கட்ராமன், தமிழ்த்துறை தலைவர் முனைவர் மேஜர் குமார், வணிகவியல் துறை தலைவர் முனைவர் சிசுபாலன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2023-25ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
தலைவராக எஸ்.வி.பெருமாள், பொதுச்செயலாராக எம்.முகைதீன் பிச்சை, பொருளாளராக முனைவர் கே.சிவசங்கர், அலுவலக செயலராக முனைவர் எஸ்.சதீஷ்நாராயணன், துணைத் தலைவர்களாக எஸ்.தங்கம், ஆடிட்டர் சிவராமன், துணைப் பொதுசெயலர்களாக எஸ்.முருகேசன், எஸ்.கண்ணன்,
செயற்குழு உறுப்பினர்களாக என்.முகம்மது அலி, எம்.எஸ்.தங்கராஜ், ஏ.ஆர்.சங்கரலிங்கம், எம்.அருள்ராஜ், பி.சேக்முகம்மது மதார், ஆர்.சங்குமுத்து, கே.எம்.காந்திமதிநாதன், பா.பிரகாஷ், முனைவர் ஆர்.சிவசங்கரி, முனைவர் எம்.ராஜகோகிலா, டி.சக்திவேல், கே.எஸ்.கோமதி மகாலெட்சுமி, எஸ்.சக்தி ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
வட்டார செயலர்களாக கே.ராஜாராம், எஸ்.ஹரிகிருஷ்ணன், எஸ்.அம்பலவாணன், எம்.முகைதீன் பிச்சை, பி.அருமைராஜ், டி.கணேசபெருமாள், வி.கணேசன், வி.ராமசுப்பிரமணியன், எம்.பாலசுப்பிரமணியன், ஆ.சை.மாணிக்கம், டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.செய்யது சுலைமான் ஆகியோரும் பதவியேற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் மு. முகைதீன் பிச்சை தலைமையில் நடைபெற்ற முதலாவது செயற்குழுக் கூட்டத்தில் கல்லூரி நிறுவனர் பிறந்த தினத்தை முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்துவது, காந்தி ஜெயந்தி விழாவை ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் கொண்டாடுவது,கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான உதவிகள், வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது,மாணவ,மாணவிகளை போட்டித்தேர்வுக்கு தயார் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.