June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான சிறுவனுக்கு கடையநல்லுார் எம்எல்ஏ. நிதி உதவி.

1 min read

Kadayanallur MLA for boy selected for international yoga competition. Financial assistance.

30.8.2023
செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக அலுவலகத்தில் வைத்து சர்வதேச யோகா போட்டிக்கு தகுதிபெற்ற சிறுவனுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கண்டு கொண்டான் மாணிக்கம் என்ற கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் 12 வயதான மகேந்திரன்ஸ்மித், யோகா கலையில் சிறந்து விளங்கும் இச்சிறுவன் கொடைக்கான லில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று அடுத்த கட்டமாக தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற தகுதி பெற்ற நிலையில் குடும்ப வறுமை காரணமாக அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் சிறுவனின் தந்தை சந்திரசேகர் தமிழக அரசுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்திருந்தார்,

இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா மாணவனின் திறமையை உலகுக்கு எடுத்துக்காட்டி மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் அவனுக்கான பணத் தேவைக்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்வின் போது மாணவனின் தந்தை சந்திரசேகர் யோகா பயிற்சி ஆசிரியர் உடன் இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *