ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை
1 min read
Case against O. Panneerselvam: Chennai High Court on its own initiative
30.8.2023
ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது
ஓ.பன்னீர் செல்வம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 2001-2006 அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து 2012-ல் சிவகங்கை நீதிமன்றத்தால் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நாளை (வியாழக்கிழமை) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.