June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் 13-ந்தேதி நடக்கிறது

1 min read

The first coordination committee meeting of India Alliance will be held in Delhi on 13th

6.9.2023-
இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் 13-ந்தேதி நடக்கிறது

இந்தியா கூட்டணி

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளனர். இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ந்தேதி மும்பையிலும் நடைபெற்றது. காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் இறுதி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வருகிற 13-ந்தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதை சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார். டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் வைத்து இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *