பூமி – நிலவுடன் செல்ஃபி எடுக்கும் ஆதித்யா L1
1 min read
Aditya L1 takes a selfie with Earth – Moon
7.9.2023
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆதித்யா, இஸ்ரோவின் திட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு தனது பயணத்தை மேற்கொண்டு, அவ்வப்போது இஸ்ரோவிற்கு (பூமிக்கு) புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
இந்நிலையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான பாதையில் லாக்ரஞ்சியன் புள்ளி எனப்படும் L1 புள்ளியை நோக்கி பயணிக்கும் ஆதித்யா, அதனுள்ளே பொருத்தப்பட்ட அதி நவீன கேமிரா மூலம் தன்னையும், பூமியையும் மற்றும் நிலவையும் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக மகிழ்ச்சியுடன் இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. அந்த புகைப்படங்களையும் வீடியோவாக இஸ்ரோ பகிர்ந்துள்ளது.