சட்டமன்ற உறுதிமொழிக்குழு ஆய்வை புறக்கணித்த போலீஸ் கமிஷனர்-எஸ்.பி. விளக்கம் அளிக்க உத்தரவு
1 min read
he Commissioner of Police who ignored the Assembly’s oath commission probe-S.P. Order to explain
7.9.2023
தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் இன்று நெல்லை மாவட்டத் தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வரு கின்றனர். இதன் ஒரு பகுதியாக நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையின் நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் அங்கு வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த உறுதிமொழிக் குழுவினர், இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தின் போது, போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அவ்வாறு விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு பரிந்துரைக்கப்படும் என சட்டமன்ற உறுதி மொழிக்குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.