June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமி்ழ்நாடு அரசின் பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு ஆதரவு கருத்து

1 min read

Comment in support of Sanatana Dharma in Tamil Nadu Government textbook

12.9.2023
தமி்ழ்நாடு அரசின் பிளஸ் பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு ஆதரவு கருத்து உள்ளது.

சனாதனம்

சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனாலும் உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க. தலைவர்கள் பலர் தொடர்ந்து சனாதனத்திற்கு எதிராக பேசி வருகிறார்கள். தொடர்ந்து பேசுவோம் என்றும் கூறுகிறார்கள். சனாதனம் என்பது வேறு இறைவழிபாடு என்பது வேறு என்ற கோணத்திலும் பேசுகிறார்கள்.
அறவியலும் இந்தியப் பண்பாடும் என்ற பாடப் புத்தகத்தின் பக்கம் 58-ல், “இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்-இம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும்.

ஓர் உயிர் எந்த காரணத்திலாவது வருந்துவதாகவே இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.

இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்,” என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.

இந்து புகைப்படங்களை மோடியின் ஆதரவாளர் ஒருவர் சமூக வலைத்தளப் பதிவில்,

’12 ஆம் வகுப்புக்கான தமிழ்நாடு மாநில அரசு புத்தகத்திலிருந்து ஒரு சான்று இதோ. சனாதன தர்மம் இந்து மதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, தி.மு.க.வினர் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுவது தெளிவாகத் தெரிகிறது’

எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து பலரும் பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர்.

இதற்கு தி.மு.க. தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.