June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

சுரண்டையில் ஒன்றரை கோடி ரூபாயில் 2 பாலங்கள் அடிக்கல் நாட்டு விழா

1 min read

Foundation laying ceremony of 2 bridges at one and a half crore rupees in Surandai

21.9.2023
தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுரண்டையில் ரூபாய்
ஒரு கோடியே ஐம்பது வட் சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட இருக்கும் இரண்டு பாலங்களுக்கும் தென்காசி எம் எல்ஏ எஸ்.பழனி நாடார் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெய பாலன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

சுரண்டை இலந்தை குளத்தின் மேல் பாலம் கட்ட ரூ.74 லட்சமும், குலையநேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டைகுளம் மறுகாலில் தடுப்பு சுவர் அமைத்து பாலம் கட்ட ரூ.76 லட்சமும் தென்காசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கி அதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை வைத்துள்ளார். வகித்தார்.மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், சுரண்டை நகர் மன்ற துணைத்தலைவர் சங்கரா தேவி முருகேசன். சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், ரெட்டை குளம் நாட்டாண்மைகள் கணபதி நாடார். சிவராஜ கோபால் தேவர், குலையநேரி ஊராட்சி மன்ற தலைவர் சீதா லட்சுமி பாலமுருகன், சுரண்டை அழகு பார்வதி அம்மன் கோயில் நிர்வாக கமிட்டியினர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பழனி நாடார் எம் எல்ஏ பேசிய தாவுது :- சுரண்டை பகுதி மக்களின் 15 ஆண்டு கால கோரிக் கையை நிறைவேற்றி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்க ளையும் செயல்படுத்தி வருகிறார். உதாரணமாக யாராலும் கொடுக்க முடியாது எனக்கூறிய மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகை மாதந்தோ றும் ஆயிரம் திட்டத்தை வெற்றிகரமாக தொடங்கி வைத்துள்ளார்.

சுரண்டை பகுதி மக்களின் நீண்ட கால கனவு திட்டமான ரெட்டைகுளம் கால்வாய் திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு தயாரிக் கப்பட்டுள்ளது. விரைவில் ரெட்டை குளம் கால்வாய் திட்டத்தை தமிழக முதல்வர் அறிவிப்பார். குடிநீர் பிரச் னையை தீர்ப்பதற்காக அந்தந்த பகு தியில் போர்வெல் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச் சியில் கவுன்சிலர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *