June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

“காலில் எல்லாம் விழக்கூடாது”- வானதி சீனிவாசனை கடிந்து கொண்ட மோடி

1 min read

“Everything should not fall on your feet” – Modi scolded Vanathi Srinivasan

22.9.2023
வானதி சீனிவாசனை காலில் எல்லாம் விழக்கூடாது என்று பிரதமர் மோடி செல்லமாக கடிந்து கொண்டார்.

வானதி சீனிவாசன்

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும், அனைத்து கட்சிகள் உறுப்பினர்களுடன் ஏகபோக ஆதரவுடன் நிறைவேறியது. இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதற்கு, பிரதமர் மோடியை அனைவரும் பாராட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பாராளுமன்ற பெண் எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி போட்டோ எடுத்துக் கொண்டார்.

இன்று, காலை டெல்லி பா.ஜனதா தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது, பா.ஜனதா மகளிர் அணி சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வாழ்த்தி குரல் எழுப்பினர். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்றார்.

கடிந்து கொண்டார்

இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் மோடி சட்டென பின் நகர்ந்தார். அத்துடன் நோ… நோ… காலில் விழக்கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார். வானதி சீனிவாசன் பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

வானதி விளக்கம்

இதுபற்றி வானதி சீனிவாசன் கூறும்ேபொது, “மகளிர் அணி சார்பில் அவரை வரவேற்றோம். அப்பொழுது நான் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றேன். ஆனால் அவரோ, உங்களின் வணக்கத்தை ஏற்கிறேன். ஆனால் காலில் விழுவது எனக்கு பிடிக்காது. இனி இதுபோல் செய்யக்கூடாது” என்று அறிவுரை வழங்கினார்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.