June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி நியாயவிலை கடைகளில் ரொக்கமற்றபணப்பரிவர்த்தனை-கலெக்டர் தொடங்கி் வைத்தார்

1 min read

Cashless at Tenkasi Fair Price Shops Initiated by the Transaction-Collector

23.9.2023
தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் ரொக்கமில்லா மின்னணு பணப்பரிவர்த்தனையை மாவட்ட கலெக்டர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.

ரேஷன்கடை

தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகளில் ரொக்கமில்லா மின்னணு பணப்பரிவர்த்தனையை ஆர் சர்ச் தெரு நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந் திரன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் பொது விநியோகத் திட்டம் ரா.திஸ்யா முன்னிலை வகித்தார், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 505 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 321 முழுநேர நியாய விலைக் கடைகளும், 184 பகுதிநேர நியாய விலைக் கடைளும் செயல்பட்டு வருகின்றன,மின்னணு பரிவர்த்தனையின் அளவு இந்தியாவில் உயர்ந்துகொண்டே செல்வதால் ரொக்கமில்ன பரிவர்த்தனை தவிர்க்க முடியாத வளர்ச்சியாக மாளி வருகிறது. யுபிஐ சாமானிய மக்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும், நேரடியாக வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படுவதால் மக்கள் வங்கிக்கும், பணம் எடுக்கும் இயந்திரத்தை நோக்கி செல்லும் நேரம் குறைகிறது. தமிழக அரசு நியாய விலைக் கடைகளிலும், ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை செயல்படுத்திட அறிவுறுத்தியதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் இன்று முதல்கட்டமாக 105 நியாய விலைக் கடைகளில் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனை யுபிஐ தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கூட்டுரவுத் துறையின் கீழ் 505 நியாய விலைக் கடைகளிலும் இந்தடைமுறை செயல்படுத்தப்படும். இதனால் மக்கள் தங்கள் செலுத்த வேண்டிய தொகையை எளிதாகவும், சரியாகவும் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் இரா.ராஜ் வரவேற்புரை ஆற்றினார் இறுதியாக கூட்டுறவுச் சங்க மேலாளர் அழகுசுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாளர் கோமதி சந்திரன் செய்தார். விழா நிகழ்வுகளை தென்காசி மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.