June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு- கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்

1 min read

புதிய கவர்னர் ஆர்.என்.ரவி

6 thousand 80 crore allocation for Tamil Nadu railway projects- Governor RN Ravi Perumitham

24.9.2023
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
ரூ. 6,080 கோடி

இந்திய ரெயில்வே தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ. 6,080 கோடியை சாதனை அளவாக ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டு மக்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி தங்கள் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை மற்றும் சென்னை விஜயவாடா இடையே இரண்டு வந்தே பாரத் ரெயில் சேவைகளை மாநிலத்துக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.