June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க. விலகல் குறித்து இப்போ எதுவும் சொல்ல முடியாது-அண்ணாமலை

1 min read

A.D.M.K. Nothing can be said about withdrawal now.. BJP. President Annamalai

25/29.2023
அ.தி.மு.க. விலகல் குறித்து இப்போ எதுவும் சொல்ல முடியாது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.

அ.தி.மு.க. விலகல்

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் இடையே இருந்து வந்த கூட்டணி முறிந்து விட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது.
கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் தலைவர்கள் பற்றி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அவதூறாக பேசியது, கொள்கைகளை விமர்சித்தது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பா.ஜ.க.-வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்து இருப்பது பற்றி பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பேசும் போது, “தற்போது யாத்திரையில் இருப்பதால், அ.தி.மு.க. வெளியிட்ட அறிக்கையை என்னால் படிக்க முடியவில்லை. தற்போதைய சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக எங்களது தேசிய தலைமையே கருத்து தெரிவிக்கும். ஊடகத்தை சார்ந்த அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கென தனி கோட்பாடுகள் உள்ளன. எங்களது தேசிய தலைமை சரியான நேரத்தில் கருத்து தெரிவிக்கும்.” என்று தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *