சென்னையில் சரக்குவேன் கவிழ்ந்ததில் 7 ஆயிரம் முட்டைகள் உடைந்து ஆறாக ஓடியது
1 min read7,000 eggs were broken into six when a cargo van overturned in Chennai
27.9.2023
கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். மொத்த முட்டை வியாபாரி. இவர் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சில்லரையாகவும் மொத்தமாகவும் முட்டை சப்ளை செய்து வருகிறார். இவர் சரக்கு வேனில் 10 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு அதே பகுதி, அம்பேத்கர் நகரில் உள்ள கடைக்கு முட்டை சப்ளை செய்வதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த மழைநீர் வடிகால்வாய் மீது மினி வேன் ஏறி இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சரக்கு வேனில் இருந்த முட்டைகள் நொறுங்கி ஆறாக ஓடியது. மொத்தம் 7 ஆயிரம் முட்டைகள் முழுவதும் நொறுங்கியது. 3 ஆயிரம் முட்டைகள் சேதம் அடையவில்லை. அதனை அப்பகுதி மக்கள் சேகரித்து கொடுத்து உதவி செய்தனர். உடைந்த முட்டைகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. அதில் மண்ணை கொட்டி துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். வேன் விபத்தில் 7 ஆயிரம் முட்டைகள் நொறுங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.