May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக டாக்டர் அய்யாத்துரை பாண்டியன் நியமனம்

1 min read

Dr Ayyathurai Pandian has been appointed as AIADMK Policy Propagation Deputy Secretary

28.9.2023
அதிமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக டாக்டர் அய்யாதுரை பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

அய்யாதுரை பாண்டியன்

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதை தொடர்ந்து அதிமுகவில் மாற்றங்கள் செய்வதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த டாக்டர்
ச. அய்யாதுரை பாண்டியன், நியமனம் செய்யப்பட்டுள் ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமிஅறிவித்துள்ளார்.

மேலும் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளராக தச்சை என். கணேசராஜா, திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் தமிழக சட்டத்துறை அமைச்சரும் அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா ஆகியோரை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் அய்யாதுரை பாண்டியன் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள தச்சை என்.கணேசராஜா ஆகியோருக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.