புளியங்குடியில் ஆட்டோ டிரைவர் கருகிச்சாவு- கொலையா?
1 min readAuto driver charred to death in Buliangudi – murder?
30.9.2023
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள மலையடிக்குறிச்சி பெரியகுளம் பகுதியில் இன்று காலை ஆட்டோ ஒன்று தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அந்த ஆட்டோவில் எரிந்த நிலையில் ஆண் சடலமும் கிடந்தது. இதையடுத்து ஆட்டோ பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தியதில் அது புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த வெள்ளத்துரை (வயது60) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இவர் தனது குடும்பத்தினரை பிரிந்து வாசுதேவநல்லூரில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அவரை நேற்று முதல் காணவில்லை.
இந்த நிலையில் அவரது ஆட்டோவில் எரிந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அவரை யாரேனும் ஆட்டோவுடன் கடத்தி சென்று கொலை செய்து எரித்து இருக்க லாமா? அப்படியானால் அந்த நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தா ர்கள்? என்பது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.