May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

1 min read

Extension of deadline for exchange of 2000 rupee notes

30.9.2023
வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் அக்டோபர் 7-ந்தேதி வரை வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அல்லது வங்கி கணக்குகளில் திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக கடந்த மே 10-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து 93 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதாக கடந்த செப்டம்பர் 1-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.