நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
1 min read
Actor Thilakam Sivaji Ganesan’s Birthday – Chief Minister M.K. Stalin’s flower-sprinkling honor
1.10.2023
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :-
முத்தமிழறிஞர் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள் இன்று!
நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் “நடிகர் திலகம்” சிவாஜி கணேசன் அவர்களின் புகழ், தரணியும், தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்! இவ்வாறு முக ஸ்டாலின் கூறி இருக்கிறார்