குன்னூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு திமுக நிதி உதவி
1 min read
DMK financial assistance to families of Coonoor accident victims
2.10.2023
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடையம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்று திரும்பிய போது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்தது.
அந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். அதில் 8 பேர் தென்காசி மாவட்டம் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் இறந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து தலா ரூ.10000 வீதம் ரூ.80000 வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லத்துரை, கடையம் ஒன்றிய திமுக செயலாளர்கள் ஜெயக்குமார், மகேஷ் மாயவன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்