June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடி மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்: மும்பை போலீசுக்கு இ-மெயிலில் மிரட்டல்

1 min read

We will bomb PM Modi: Email threat to Mumbai Police

மும்பை,அக்.8-
பிரதமர் மோடி, ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று மும்பை போலீசுக்கு இ-மெயிலில் மிரட்டல் வந்துள்ளது.

ஸ்டேடியம்

இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சில ஆட்டங்கள் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மும்பை போலீசாருக்கு இ-மெயிலில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில் தங்களது தலைவர் லாரன்ஸ் பிஸ்னோயிக்கு ரூ.500 கோடி தர வேண்டும். இல்லையெனில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல தாதாவான லாரன்ஸ் பிஸ்னோய் தற்போது டெல்லி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது ஆட்கள் இந்த மிரட்டலை இ-மெயிலில் அனுப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த இ-மெயிலில் பிரதமர் மோடி மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் இந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.