தென்காசி கோவிலுக்கு கும்பாபி ஷேகம் நடத்த எம்எல்ஏ கோரிக்கை
1 min read
MLA’s request to perform Kumbabi Shekham at Tenkasi temple
12.10.2023
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் சட்டமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்து பேசினார்.
தமிழக சட்டமன்றத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் கேள்வி நேரத்தில் பேசும்போது கூறியதாவது:-
தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.எனவே அந்தப் பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் அந்த கோவிலுக்கு உடனடியாக கும்பாபிஷேகம் நடத்திட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக தென்காசி காசி விசுவநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
அதனைத் தொடர்ந்து அவரது கேள்விக்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்கு முன்பான பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை அனுமதி, மண்டல மாநில வல்லுநர் குழுக்கள் அனுமதி, பெறப்பட்டு ரூபாய் 3.5 கோடி மதிப்பேட்டில் 15 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் கூடுதலாக ரூபாய் 1.60 கோடி செலவில் ஒரு ராஜகோபுரம் பணியும் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அடுத்த முகூர்த்த தினத்தில் நிச்சயமாக அந்த பணிகள் தொடங்கப்படும். பணிகள் நிறைவடைந்தபின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் அந்த நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடாரும் கலந்து கொள்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தகவல் அறிந்த தென்காசி சட்டமன்ற தொகுதி பொதுமக்கள், பக்தர்கள், வணிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தென்காசி காசி விசுவநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட சட்டமன்றத்தில் குரல் கொடுத்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் மற்றும் கும்பாபிஷேகம் நடத்திட உறுதியளித்துள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இருவருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.