July 19, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை; நாயை கடித்து குதறியது

1 min read

A leopard entered the town near the end; The dog was bitten

12.10.2023
தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை வீட்டில் கட்டி இருந்த நாயை கடித்துக் கொன்றது.

தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இந்த விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதி யை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு ஆடு மாடு மற்றும் நாய்களையும் வேட்டையாடி செல்கின்றன. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடையம் அருகே உள்ள இதே பெத்தான் பிள்ளை குடியிருப்பு கிராமம் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 8 சிறுத்தைகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சிறிது நிம்மதி அடைந்த நிலையில் நிலையில் இப்போது பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் ஒரு சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது அந்த சிறுத்தை அந்த பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 48) என்பவரது வீட்டில் மரத்தில் கட்டி இருந்த நாயை கடித்து தின்றுள்ளது.

காலையில் முருகன் எழுந்து பார்த்தபோது மரத்தில் கட்டப்பட்டிருந்த கட்டப்பட்டிருந்த நாயின் உடற்பகுதியை தின்ற நிலையில் இறந்து கிடந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறை யினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த கால் தடங்களை வைத்து ஊருக்குள் புகுந்து நாயை வேட்டையாடியது சிறுத்தை தான் என்பதை உறுதி செய்தனர்

இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்ததோடு உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வனத்துறை யினரும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *