திருப்பதி கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
1 min read
Durga Sthal’s Sami Darshan at Tirupati Temple
13.10.2023
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
துர்கா ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஏழுமலையானை தரிசிக்க குடும்பத்தினருடன் இன்று திருப்பதி திருமலைக்கு வருகை தந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர்.
திருமலையில் தங்கிய அவர் காலை அபிஷேக சேவையில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.