பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
India will form a coalition government in the parliamentary elections – Chief Minister M. K. Stalin’s speech
14.10.2023
2024 தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மு.க.ஸ்டாலின்
சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாடு தொடங்கியது. இதில், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.
இந்த மாநாட்டில் “இந்தியா” கூட்டணியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியின் மகளிர் தலைமைகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாஜகவை முற்றிலுமாக வீழ்த்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற எண்ணத்தில் பிரதமர் செயல்படுகிறார்.
உண்மையான அக்கறையுடன் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக செயல்படுத்தி இருந்தால் பாராட்டி இருக்கலாம்.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும். 2024க்கு பிறகு பாஜகவின் ஆட்சி இருக்காது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கக்கூடாது. இந்தியா கூட்டணைி கொள்கை கூட்டணி. இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
இந்த மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை இன்றே வந்துவிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.