ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Small grain awareness program at Alwarkurichi College
14.10.2023
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரியில் சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந் திரன்தலைமயில் நடைப்பெற்றது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லுாரியில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் ஈட் ரைட் கிளப் மற்றும் நியூட்ரிஷியன் கிளப் இணைந்து சிறுதானிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந் திரன் தலைமையில் நடைப்பெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர்துரை.இரவிச்சந்திரன்,சிறுதானியவிழிப்புணர்வு உறுதிமொழியினை அனைத்து மாணவு, மானவியர்களுடன் எடுத்துக் கொண்டு கையெழுத்து விழிப்புணர்வுப் பதாகையில் கையொப்பமிட்டார்.
அதனைத் தொடர்ந்து சிறுதானிய அரங்குகளைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர், மாணவ, மாணவியர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து சிறுதானிய விழிப்புணர்வு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச் சியில், தென்காசி மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத் துறை) மருத்துவர் சசிதீபா, ஸ்ரீ பரமகல்யாணி கல்லுாரி முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம், தென்காசி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மகாராஜன், செல்வ ராஜ், முத்துராஜா, கிருஷ்ணன் டைட்டஸ் பெர்னாண்டோ, செல்லப்பாண்டி சங்கரலிங்கம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.