கடையம் பாரதிசெல்லம்மாள் சிலைக்கு அவர்களது கொள்ளு பேரன் மரியாதை
1 min read
Their great-grandson respects the Bharatishellammal idol at the end
14.10.2023
மகாகவி பாரதியாரின் கொள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி கடந்த இரண்டு தினங்களாக கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் வந்திருந்து செல்லம்மாள் பாரதி
திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் .
தனது பாட்டனார் மகாகவி பாரதியார் மற்றும் செல்லம்மாள் வாழ்ந்த பூர்வீக வீடு, வழிபட்ட பெருமாள் கோவில், தட்டப்பாறை , நித்திய கல்யாணி அம்மன் கோவில் , பத்திரகாளி அம்மன் கோவில் ஆகியவற்றை பார்வையிட்டதோடு , பாண்டிச்சேரியில் இருந்து வந்திறங்கிய புகைவண்டி நிலையத்தையும் அந்த நிலையத்தில் சேவாலயா தொண்டு நிறுவனம் தற்போது ஓவியங்களாக தீட்டிக் கொண்டிருக்கும் பாரதியின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் பாரதியார் கவிதைகள் போன்றவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கடையம் திருவள்ளுவர் சங்க தலைவர் சேதுராமலிங்கம் மற்றும் கடையம் நலச்சங்க செயலாளர் லயன் கோபால் இவர்களோடு நூலகர் மீனாட்சி சுந்தரம் உதவியாக இருந்து பாரதியின் கடையம் வாழ்க்கையை நிரஞ்சன் பாரதிக்கு விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடையம் சேவாலயா செல்லம்மாள் பாரதி கற்றல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தான் சிறப்பாக செய்திருந்தார்.