தமிழகத்தில் வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை- சென்னை வானிலை ஆய்வு மையம்
1 min read
Northeast Monsoon to strengthen in Tamil Nadu – Chennai Meteorological Centre
25.10.2023
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைய தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான புயல்களால் வட கிழக்கு பருவமழை ஆரம்பத்தில் வலுக்குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், புயல்கள் கரையை கடந்ததால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் வலுவடைய தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியால், வரும் 29ம் தேதி தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 29ம் தேதி கடலூர், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 78.8 மி.மீ மழை பெய்துள்ளது என்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 39 சதவீதம் குறைவு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.