பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் 13 பேர் பலி
1 min read
13 people died when a car collided with a lorry due to fog
26.10.2023
பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் 13 பேர் பலியானாகள்.
விபத்து
ஆந்திர மாநிலம் பாகேபள்ளியைச் சேர்ந்த 13 பேர் ஒரே காரில் பெங்களூருவுக்கு இன்று காலை புறப்பட்டனர். அவர்கள் இன்று காலை 6 மணி அளவில் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது.
இந்நிலையில், சிக்கபல்லாபூர் அருகே உள்ள சித்ராவதி போலீஸ் நிலையம் முன்பு சாலையோரத்தில் நாகாலாந்து மாநில பதிவு எண் கொண்ட சிமெண்ட் கலவை லாரி ரோட்டோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. பனிப்பொழிவின் காரணமாக கலவை லாரியை கவனிக்காத கார் டிரைவர் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதினார். மோதிய வேகத்தில் கார் சிமெண்ட் கலவை லாரிக்குள் சொருகிக் கொண்டது.
13 பேர் பலி
இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர்.
இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பிணமாக மீட்கப்பட்டனர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் வழியிலேயே மேலும் 7 பேரும் பலியானார்கள். இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.