திமுக நிர்வாகிக்கு திமுகமாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மருத்துவ நிதி உதவி
1 min read
DMK to DMK executive District Incharge V. Jayabalan Medical Financial Assistance
2.11.2023
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக கிளைச் செயலாளருக்கு தென்காசி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறியதோடு மாவட்ட திமுக சார்பில் மருத்துவ நிதி உதவியும் வழங்கினார்
கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் வேல்மயில் நாடார்பட்டி திமுக கிளைச் செயலாளர் ராமவாசகம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் திமுக கிளை செயலாளர் ராமவாசகத்தை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியதோடு மருத்துவ செலவுக்காக தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரூ 8000 நிதியுதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் சீ.பொன் செல்வன், ஜே.கே.ரமேஷ், சுந்தரபாண்டியபுரம் மாரியப்பன், சாம்பவர் வடகரை கோ.மாறன், யோவான் உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்