அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தென்காசி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
1 min read
For unorganized workers Tenkasi Collector Important Notice
2.11.2023
தென்காசி மாவட்டத்தில் மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய தேசிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய www.eshram.gov.in என்ற தேசிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில் கட்டுமான தொழிலாளர்கள், ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், சிறு, குறு விவசாய தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்சா தொழிலாளர்கள், காய்கறி பழ தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தச்சு வேலை செய்வோர், கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள், டீக்கடை தொழிலாளர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மற்றும் விபத்து ஊனத்துக்கான காப்பீடு பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் பெறலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.03.2022-க்குள் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படுகிறது.எனவே, தென்காசி மாவட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் யாரேனும் 31.03.2022-க்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ அல்லது ஊனமடைந்து இருந்தாலோ, அந்த தொழிலாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
31.03.2022-க்கு பிறகு
யாரேனும் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ, ஊனம் அடைந்து இருந்தாலோ அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து காப்பீட்டு தொகையை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் துறை அலுவலக கட்டிட வளாகம், 2ம் தளம், பெருமாள் புரம், திருமால் நகர், திருநெல்வேலி-627007, தொலைபேசி எண்:0462-2555014 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.