ஜப்பானில் சிவாலயம் கட்டி வரும் பக்தர் தோரணமலையில் தரிசனம்
1 min read
A devotee who is building a temple in Japan has a darshan at Thoranamalai
5.11.2023
ஜப்பானில் சிவாலயம் கட்டி வரும் பக்தர் தனது குடும்பத்தினருடன் வந்து தென்காசி மாவட்டம் கடையம் செல்லும் பாதையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் தரிசனம் செய்தனர்.
பழனியில் அமைந்துள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து கௌதம் கார்த்திக் என்பவர் மூலம் ஜப்பானில் சிவாலயம் கட்டி வரும் பால கும்பகுருமுனி தனது குடும்பத்தினருடன் தோரணமலை முருகன் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவரது மனைவி மற்றும் சிறு வயது மகளுடன் முதலில் விநாயகரை வழிபட்டு மலையேறினர். ஓம் அகத்தியரே போற்றி, முருகா சரணம் என சொல்லி மலையேறிய அவர்கள் முருகனுக்கு அபிசேகம் செய்த போது கண் மூடி தியானித்து வழிப்பட்டனர்.
பின்னர் மலையில் இருந்து கீழிறங்கிய அவர்கள் மற்ற பக்தர்களுடன் இணைந்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர். சாம்பாரை ருசித்து சாப்பிட்ட அவர்கள் அதன் பெயரை கேட்டுத் தெரிந்து கொண்டதுடன், ரசத்தை ரசித்து சாப்பிட்டு, சிறிது குடித்தனர். சர்க்கரை பொங்கல், பால்பாயாசம் போன்றவற்றை சாப்பிட்டு அமிர்தம் போல உள்ளதாக பாராட்டு தெரிவித்தனர்.
அவர்களுக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் பிரசாதங்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.