குற்றாலம் அருகே இளைஞர் கொலையில் தாய் – தந்தை – மாமா கைது
1 min read
Mother-father-uncle arrested in youth murder near Courtalam
8.11.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே வல்லம் பிஸ்மி நகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கழுத்தை நெறித்து கொலை செய்ததாக அவரது தாய் தந்தை மாமா ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலம் போலீஸ்சரகம் வல்லம் பிஸ்மி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர் இவரது மகன் முகமது சித்திக் (வயது 25) இவர் குடி போதைக்கு அடிமையானவர் நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 ம் தேதி முகம்மது சித்திக் பைக்கில் சென்ற போது கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த முகம்மது சித்திக்கை அவரது மாமா திவான் ஒலி மற்றும் சிலர் மீட்டு அவரது வீட்டில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.சிறிது நேரத்தில் முகமது சித்திக் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகம்மது சித்திக்கின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முகம்மது சித்திக் மர்ம மரணம் அடைந்துள்ளதாக வழக்கு பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பிரேத பரிசோதனை அறிக்கையில் முகம்மது சித்திக் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக குற்றாலம் போலீசார் இது பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவரது தாய் தந்தை மாமா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் முகம்மது சித்திக் சாலையில் விழுந்து கிடந்த போது தூக்கி வந்து வீட்டில் அடைத்து வைத்தோம், சிறிது நேரம் கழித்து போதை தெளிந்த நிலையில் கதவை உடைக்க முயற்சித்த தோடு அனைவரையும் அவதூறாக அசிங்கமாக பேசினார். எனவே அதனை தடுக்க அவரது வாயை பொத்தியபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உடனடியாக குற்றாலம் போலீசார் ஏற்கனவே மர்ம மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்கமாக மாற்றியதோடு இந்த சம்பவம் தொடர்பாக முகமது சித்திக்கின் தாய் செய்யது அலி பாத்திமா (வயது 42) அவரது தந்தை முகைதீன் அப்துல் காதர் (வயது 55) மாமா திவான் ஒலி (வயது 39) ஆகிய மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ராஜபடுத்தினார்கள்.நீதிபதி மூவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.