July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

மேல்முறையீடு செய்த மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத்தொகை- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுநாள் வழங்குகிறார்

1 min read

The appellant daughter received Rs. 1,000 royalty- First Minister M.K. Stalin delivers the day after tomorrow

8.11.2023
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உதவி தொகை கிடைக்காத மகளிர் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி இதுவரை 11,85,000 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வரும் நவம்பர் 10ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைசர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதில் மேல்முறையீடு செய்தவர்களில் தேர்வானவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.