தென்காசி மாவட்டத்தில் அவ்வையார் விருது – 2024- மாவட்ட ஆட்சியர் தகவல்
1 min read
Avvaiyar Award in Tenkasi District – 2024- District Collector Information
10.11.2023
தென்காசி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு அவ்வையார் விருதுக்கான கருத்துருக்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத் திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 8 கிராம் (22காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.1,00,000/- (ஒரு இலட்சம்) க்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். 2024 ஆம் ஆண்டு அவ்வையார் விருதுக்கான கருத்துருக்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தின் https:/[wards.in.gov.) வழியாக 20.11.2023 க்குள் இணையதளம் மூலம் அனுப்புமாறு தெரிவித்துககொள்ளப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு அவ்வையார் விருதுக்கான கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூகசீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு வகையில் சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் பெண்களுக்கான இச்சமூகசேவையை தவிர்த்து வேறு சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, வேண்டும். சமூக இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.
கையேட்டில் (Booklet)இணைக்கப்பட வேண்டியவை
பொருளடக்கம் மற்றும் பக்க எண், இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் உயிர்தரவு ( Bio Data), சுயசரிதை (ம) Passport size photos- மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைக் கடிதம், மாவட்ட சமூகநல அலுவலரின் பரிந்துரைக் கடிதம், ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (Bulletin Points) (தமிழ் மருதம் மற்றும் ஆங்கிலம் -verdana), தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் விருது பெற்றிருப்பின் விருதின் பெயர்/ யாரிடமிருந்து பெறப்பட்டது. பெற்ற வருடம் விருது பெற்றதற்கான காரணம்), கையேட்டில் விருது பெற்ற புகைப்படம் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் மற்றும் பக்கங்களுக்கு கொடி வைக்கவும், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு, சமூசு சேவையாளரின் / சமூகசேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம் தொண்டு நிறுவனத்தின் பதிவு உரிமம் ஆண்டறிக்கை, சமூக பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்பு படிவம் (தமிழ் – மருதம் மற்றும் ஆங்கிலம் verdana) முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் மற்றும் கையேடு (Booklet) தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ளவாறு உரிய முறையில் இணையதளம் மூலமாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.