ஆண்டுக்கு விவசாயம் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் சந்திரசேகரராவ்
1 min read
Chandrasekhar Rao earns Rs 1.44 crore from agriculture per year
10.11.2023
தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.
தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.
பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.
ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.