கர்நாடக மாநில பாஜக தலைவராக எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமனம்
1 min read
Yeddyurappa’s son Vijayendra appointed as Karnataka state BJP president
10.11.2023
கர்நாடக மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எடியூரப்பா
கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை அடுத்து அம்மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நளின் குமார் கட்டீல் ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களாக கர்நாடகா மாநில புதிய பாஜக தலைவர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.
இதேபோல், கர்நாடக மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரையும் பாஜக நியமிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக புதிய தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் விஜயேந்திர எடியூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தந்தையின் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.