July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

முத்துமாலைபுரம் மாலைநேர பயிலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்

1 min read

Diwali celebration at Muthumalaipuram Evening Pailagam

12.11.2023
முத்துமாலைபுரத்தில் உள்ள ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு மாலைநேர பயிலகத்தில் தோரணமலை சார்பில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

மாலைநேர பயிலகம்

தோரணமலை முருகன் கோவில் சார்பில் இறைபணியோடு பல்வேறு சமூகப்பணிகளும் நடந்து வருகிறது. குறிப்பாக ஏழை குழந்தைககள் படிக்க, வேலைவாய்ப்பு பயிற்சி, இலவச திருமணம் போன்றவை நடந்து வருகிறது. போலீஸ் மற்றும் ராணுவ வேலைக்கான பயிற்சி மைதானமும் கோவில் வளாகத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணியை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்து வருகிறார்.
தோரணமலை வளர்ச்சிக்கு பாடுபட்டு பொன்விழா கண்ட அமரர் ஆதிநாராயணன்- சந்திரலீலா நினைவாக முத்துமாலைபுரத்தில் அவர்கள் வாழ்ந்த வீட்டை கிராம மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் மாலைநேர படிப்பகமாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் கிராமப்புற மாணவர்கள் விளையாட விளையாட்டு மைதானமும் உருவாக்கப்பட்டு உள்ளது. மாலைநேர படிப்பகத்தில் தோரணமலை முருகன் கோவில் சார்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. எழுத்தாளர் கடையம் பாலன், பத்திரிகையாளர் பாரதி, அழகர் என்ற செண்பகராஜன் ஆகியோர் குழந்தைகளுக்கு நல்லாசி வழங்கினார்கள். மேலும் சுற்றுப்புற மாசு எற்படாத வண்ணம் தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அங்கு வந்திருந்த குழந்தைகள் அனைவருக்கும் இனிப்பு, காரம் போன்ற பலகாரம் வழங்கப்பட்டது. பின்னர் பட்டாசு கொளுத்தி தீவாவளி பண்டிகையை குழந்தைகள் குதூகலமாக கொண்டாடினார்கள்.
அதேபோல் தோரணமலை முருகன் கோவிலிலும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்புற சூழல் பாதிக்காத வகையில் தீபாவளிளை எப்படி கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு பதாகையும் கோவிலில் வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.