10 வது ஆண்டாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்
1 min read
Prime Minister celebrates Diwali with soldiers for 10th year
12.11.2023
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாட ஹிமாச்சல் பிரதேசம் சென்றார். பிரதமராக பொறுப்பேற்ற 2014 முதல் 10 வது ஆண்டாக மோடி ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளியை கொண்டாடினார்.
ஒவ்வாரு ஆண்டும் காஷ்மீர், சீன எல்லை, பாக்., எல்லை பகுதிகளுக்கு சென்று, அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களுடன் கொண்டாடும் பிரதமர் மோடி இன்று ஹிமாசல்பிரதேசம் லெப்சா சென்றடைந்தார். இவரை ராணுவ மேஜர் , கமாண்டர்கள் வரவேற்றனர்.
அங்கு தேசியக்கொடிஏற்றி வைத்த மோடி, வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மோடி கூறியுள்ளதாவது:-
ஹிமாச்சல பிரதேசத்தின் லெப்சாவில், துணிச்சல் மிக்க பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடுவது ஆழ்ந்த உணர்ச்சியும், பெருமையும் கொண்ட அனுபவம் ஆக உள்ளது. தங்கள் குடும்பங்களை விட்டு விலகி, நமது நாட்டை பாதுகாக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு காரணமாக நமது வாழ்வில் ஒளியேற்றுகின்றனர்.
நமது பாதுகாப்பு படையினரின் தைரியம் யாராலும் அசைக்க முடியாது. மிகவும் கடினமான நிலப்பரப்புகளில் அவர்களின் அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகி, அவர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. தைரியம் மற்றும் துணிச்சலின் உருவகமாக இருக்கும் இந்த ஹீரோக்களுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்த்து
முன்னதாக நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட செய்தியில்; ” எல்லா மக்களும் வாழ்வும், செழிப்பும் பெற்று ஆரோகக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.