அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி
1 min read
Terrible apartment fire – 9 killed
13.11.2023
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நம்பள்ளி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் கார் பழுதுபார்க்கும் கடையும் உள்ளது.
இந்நிலையில், அந்த கடையில் இன்று காலை 9.30 மணியளவில் ஊழியர் காரை பழுதுபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, கடையில் டீசல் மற்றும் வேதிப்பொருட்கள் சேமிப்புகிடங்கில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்திற்கும் பரவியது.
இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த மக்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், வேதிப்பொருட்கள் அதிக அளவில் சேமிப்புகிடங்கில் வைக்கப்பட்டிருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. கடுமையான முயற்சிக்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஆனாலும், இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 ரேக் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.