ராமேஸ்வரம் மீனவர் 21 பேர் விடுதலை; ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
1 min read
21 Rameswaram fishermen freed; 2 years imprisonment for one
15.11.2023
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்டோபர் 16, 28-ந் தேதிகளில் தொழிலுக்கு சென்ற மீனவர்களில் 22 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.
இந்த வழக்கு யாழ்பாணம், ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர் 21 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதில் 2வது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் 21 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கபடுகிறது.
2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர் முருகன் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
22 மீனவர்களிடம் பறிமுதல் 4 விசைப்படகுகள் தொடர்பான வழக்கு 2024 பிப் 12ல் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.