நெல்லையில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: வாலிபர் கொலை- கள்ளக்காதலியின் கணவர் கைது
1 min read
Chasing to death in paddy field: Murder of teenager- Husband of counterfeiter arrested
15.11.2023
நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் முகம்மது அசாருதீன்(வயது 35). இவர் நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
இவர் நேற்று இரவில் பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார் அசாருதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
முகம்மது அசாருதீனுக்கும், அவரது சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்த டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் டிரைவரான மகாராஜன் என்பவரது மனைவி பகவதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை மகாராஜன் கண்டித்ததால், பகவதி வீட்டை விட்டு வெளியேறி அசாருதீன் ஏற்பாட்டில் பேட்டை வி.வி.கே. தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மகாராஜன் எப்படியாவது முகம்மது அசாருதீனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இதையடுத்து டவுனை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் செல்வம், மற்றொரு நண்பருடன் சேர்ந்து மகாராஜன் நேற்று இரவு வி.வி.கே. தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீட்டில் பகவதியிடம் முகம்மது அசாருதீன் பேசிக்கொண்டிருந்தார்.
அவரை மகாராஜன் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். அவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
முகம்மது அசாருதீன் மீது ஏற்கனவே போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. நேற்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய டவுனை சேர்ந்த செல்வமும், அசாருதீனால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
செல்வத்தின் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் வாங்கி தருவதாக அசாருதீன் கூறி வாங்கியுள்ளார். ஆனால் ரூ.14 லட்சம் மட்டுமே செல்வத்திடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும் செல்வத்தின் ஆதார் கார்டு மூலமாக குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் அசாருதீன் பணம் பெற்றுள்ளார். அந்த விவகாரத்தில் செல்வம் சமீபத்தில் கைதாகி சிறைக்கு சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகாராஜனுடன் சேர்ந்து அசாருதீனை செல்வம், அவரது மற்றொரு நண்பர் கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய மானவராக கருதப்படும் மகாராஜனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த கொலை வழக்கு தொடர்பாக நெல்லை டவுன் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (39), பாளை சிவந்திபட்டி நடுத்தெருவை சேர்ந்த மூர்த்தி என்ற கார்த்திகேயன் (24), பாளை வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த மந்திரமூர்த்தி (25), சபரி மணி (23) ஆகிய 4 பேர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.