விவசாயிகளுக்கு 15-வது தவணையாக தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவியை பிரதமர் மோடி வழங்கினார்
1 min read
Prime Minister Modi gave financial assistance of Rs.2 thousand each to the farmers as the 15th installment
15.11.2023
விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம்’, பிரதமா் நரேந்திர மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளின் கடனைக் குறைக்க மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
இத்திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 14-வது தவணையான ரூ.17,000 கோடி கடந்த ஜூலை மாதத்தில் விடுவிக்கப்பட்டு 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்தனா்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூக போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பழங்குடிகள் பெருமை தினத்தையொட்டி (இன்று- புதன்கிழமை) நடைபெறும் கூட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 15-வது தவணைத் தொகையான ரூ.18,000 கோடியை பிரதமா் நரேந்திர மோடி விடுவித்தார்.