தென்காசியில் குழந்தைப் பாதுகாப்பு – நடைபயணம் பேரணி
1 min read
Child Protection in Tenkasi – Walking Rally
16.11.2023
தென்காசி மாவட்டத்தில் குழந்தைப் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான நடைபயணம் மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேசிய குழந்தைகள் தினத்தை (14.11.2023 ) முன்னிட்டு குழந்தைகளுக்கான நடைபயணம் என்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் துவக்கி வைத்தார் .
இப்பேரணி குழந்தை பாதுகாப்பு குறித்த கோஷங்கள் மற்றும் பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி தென்காசி புதிய பேருந்து நிலையம் வழியே இ.சி.ஈஸ்வரன்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் வந்தடைந்தது. இலஞ்சி ராமசாமி பிள்ளை ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளால், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த நாடகம், மௌன நாடகம், தற்காப்பு கலைகளான சிலம்பம், சுருள்வீச்சு ஆகிய கலைநிகழ்ச்சிகளுடன் பேரணி நிறைவு பெற்றது.
இப்பேரணிக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தென்காசி மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகின் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இப்பேரணியில் சுமார் 200 பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர் க.அருள்செல்வி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.மதிவதனா, மாவட்ட திட்ட அலுவலர் (ஒ.கு.வ.தி.) ஜோஸ்பின் சகாய பமிலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல் அலுவலர், சங்கரநாராயணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு காவலர்கள், போக்குவரத்து காவல்துறை பணியாளர்கள், குழந்தைகள் பராமரிப்பு இல்ல கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள், தன்னார்வலர்கள், தொழிற்பயிற்சி மைய பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர்கள் பங்கு பெற்றனர்.