சினிமா டைரக்டர் சேரனின் தந்தை காலமானார்
1 min read
Film director Cheran’s father passed away
16/11/2023
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இவரின் தந்தை எஸ். பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிப்புரிந்தவர். 84 வயதான பாண்டியன் சில காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் இன்று (நவம்பர் 16) காலை 6 .30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும். சேரன் தந்தை காலமானதை தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.