சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் கடலில் விழுந்தது
1 min read
The rocket part of Chandrayaan-3 spacecraft fell into the ocean
16.11.2023
சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதைத்தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வந்தது. சந்திரயான்-3 திட்டமும் வெற்றி அடைந்தது.
இந்நிலையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இஸ்ரோ வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. விண்கலம் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.
நவம்பர் 15-ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.42 மணியளவில் பூமியின் காற்று மண்டலப் பகுதிக்குள் நுழைந்தது.
புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.