நினைவு தினம்: வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மரியாதை
1 min read
Remembrance Day: Tribute to VA Chidambaranar statue
18.11.2023
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு நெல்லை டவுன் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஞான திரவி யம் எம்.பி., துணை மேயர் ராஜு, மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன் கான், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செய லாளர் விஜிலா சத்யா னந்த், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சு மணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை: வ. உ. சி 87வது நினைவுநாள் முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
ஆங்கிலேய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த தென்னிந்திய புரட்சியாளர், நாட்டில் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி இந்தியர்களை தலைநிமிர செய்த தேசிய பற்றாளர்,
நம் தாய் நாட்டின் விடுதலைக்காகவும், தொழிலாளர்களின் உரிமைக்காகவும் போராடி சிறைச் சென்ற செக்கிழுத்த செம்மல் , #கப்பலோட்டியதமிழர்
தியாகி வ. உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.