இந்த மாத மன் கி பாத் பேச்சுக்கு உங்கள் யோசனைகளை தெரிவிக்கலாம்
1 min read
Share your thoughts on this month’s Man Ki Baat talk
18.11.2023
பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ என்ற பெயரில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சி தொடங்கினார். இதன் 100-வது நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.
இந்நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துடன் இணைந்து ரோத்தக் ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்) நடத்திய ஆய்வில் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியதாவது:-
நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சி 100 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. இவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி அறிந்திருப்பதுடன், ஒரு முறையாவது கேட்டுள்ளனர்.
23 கோடி பேர் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கேட்கிறார்கள், மேலும் 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். இவர்களும் வழக்கமான நேயர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி கொண்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை கேட்பவர்களில் பெரும்பாலானோர் அரசின் செயல்பாடுகள் பற்றி அறிந்துள்ளனர். 73 சதவீதம் பேர் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
கருத்து கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 59 சதவீதம் பேர், அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் 26-ந் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச உள்ளார். இதில் வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் இருந்தால் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தகவல் தொடர்பை பயன்படுத்தி உங்கள் கருத்தை சொல்லலாம்.