July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியீடு

1 min read

Medical report released on Vijayakanth’s health

23.11.2023
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 18-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே மூச்சு விடுவதில் அவருக்கு லேசான சிரமம் ஏற்பட்டது. இதற்காகவும் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று 6-வது நாளாக விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மியாட் மருத்துவமனை விஜயகாந்தின் உடல் நிலை தொடர்பாக மருத்துவ அறிக்கையை வெளியிட்டது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் 18 நவம்பர் 2023 அன்று அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல் நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்பி தனது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாங்காடு அருகே மோட்டார் சைக்கிளை சுத்தம் செய்தபோது வாலிபர் பலி
23.11.2023
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32), மெக்கானிக்கான இவர் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது மற்றும் வாட்டர் வாஷ் செய்யும் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கார்த்திக் மோட்டார் சைக்கிளை வாட்டர் வாஷ் செய்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவர் அந்த எந்திரத்தை கீழே வீசினார். இதில் தண்ணீரின் வேகத்தில் அந்த எந்திரத்தின் முன்பகுதி கார்த்திக்கின் மார்பில் வேகமாக மோதியது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.