உண்மையில் பக்தி என ஒன்று இருந்தால், தி.மு.க., ஆட்சியை பாராட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
1 min read
Recovery of temple properties worth Rs 5,500 crore in DMK rule: Chief Minister Stalin
24.11.2023
உண்மையில் பக்தி என ஒன்று இருந்தால், தி.மு.க., ஆட்சியை பாராட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க., ஆட்சியில் இதுவரை ரூ.5,500 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளது” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சுயமரியாதை திருமணம்
சென்னையில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:
சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளித்தது திமுக ஆட்சி. அண்ணாதுரை தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் தான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.1967க்கு முன் சுயமரியாதை திருமணங்களை நடத்த முடியாத நிலை இருந்தது. தி.மு.க.,வில் இருக்கும் அணிகளில் சிறந்த அணி இளைஞர் அணி.
தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல் சமூக வலைதளம், மீடியாக்கள் மூலம் குழப்பி கொண்டு இருக்கின்றனர். கோயிலை கொள்ளையடிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். அவருக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் இதுவரை ரூ.5,500 கோடி மதிப்பு கோயில் சொத்துகள் மீட்கப்பட்டு உள்ளன. உண்மையில் பக்தி என ஒன்று இருந்தால், தி.மு.க., ஆட்சியை பாராட்ட வேண்டும். ஆனால், பக்தி இல்லை; பகல் வேஷம் போடுகின்றனர்.
மக்களை ஏமாற்ற நாடகம் ஆடுகின்றனர். இந்து ஓட்டுகள் தேவையில்லை என நான் கூறியதாக போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் வாட்ஸ் ஆப் செயலியில் ‘ஸ்டேட்டஸ்’ வைத்துள்ளார். அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளேன். திராவிட மாடல் ஆட்சியை வீழ்த்த கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் செயல்படுகின்றனர்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.