மறுமணத்தை காரணம் காட்டி இழப்பீடு தொகையை மறுக்க முடியாது-ஐகோர்ட் உத்தரவு
1 min read
Compensation cannot be denied on the ground of remarriage- high Court order
25/11/2023
கடந்த 2019-ம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார். கணவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி டெல்லி ஐகோர்ட் இழப்பீட்டை மறுத்தது.
இதை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த வழக்கில் பஞ்சாப்-அரியானா நீதிமன்றம் இந்தக் கருத்தை அவருக்கு சாதகமாகக் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் நீதிபதி அர்ச்சனா புரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுமணம் செய்துகொண்டதாலேயே ஒரு பெண்ணுக்கு அவரது கணவரின் விபத்திற்கான இழப்பீட்டுப் பணத்தை தர மறுப்பது சரியல்ல என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இறந்தவரின் விதவையான ரஜினி மறுமணம் செய்துகொண்டதால், அவரது உரிமைக் கோரிக்கையை இழக்க இது ஒரு காரணமாக இருக்கமுடியாது என்பதை கவனிக்க வேண்டும்.
விதவையின் மறுமணத்துக்கும், அவளுக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாகவும், இழப்பீடு பெறுவதற்கான உரிமையுடன் அவளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
அவரது கணவரின் இயற்கைக்கு மாறான மறைவின் விளைவாக மறுமணம் செய்து கொள்வதற்கான அவளது முடிவு முழுக்க முழுக்க அவளுடைய தனிப்பட்ட விருப்பம், அதை யாரும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் இறந்தவரின் தந்தைக்கும் இழப்பீட்டில் உரிமை உள்ளது எனவும் நீதிபதி அர்ச்சனா புரி தெரிவித்தார்.