முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான வழக்கை 6 மாதங்களில் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
high Court order to complete the case against former minister Kamaraj in 6 months
28/11/2023
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2,028 கோடி இழப்பு ஏற்படுத்தியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிராக முறைகேடு புகார் எழுந்தது.
இந்தப் புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.